பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சொல்லாட்சிச் சிறப்பு * 317 பாடற்பகுதியைப் படிக்கும்போது மரபுத் தொடரின் பொருள் ஒளியைக் காணலாம். (13) முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி-குத்துதல்அவமானப்படுதல் என்ற பொருளில் வருவது. இதுவும் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது வருவது. கர்ணன் கைவில் ஏந்தும்போது கிருபாசாரியர் கர்ணனின் குலம் பற்றிய வினாவை எழுப்பியபோது வருவது. கிருபையே இல்லாமல்கிருபாசாரியர்-இப்படிக் கேட்டதும். கர்ணன் கூனிக் குறுகிக் கூசிப் போனான்; முகத்தில்கரும்புள்ளி செம்புள்ளிகுத்தினாற் போலானான்! (1-பக். 227) இதில் கர்ணன் அவமானப்பட்டதை மரபுத்தொடர் மின்வெட்டுபோல் பொருள் ஒளிவிடுவதைக் காணலாம். (4) ஆலமரமாக ஆவதற்கு-ஆசைப்படலாமா சவுக்கு? என்பது குருடன் இராஜவிழி விழக்கலாமா என்ற பொருளில் வருவது. இதுவும் அரங்கேற்றத்தின்போது வருவது. தாதை ஒரமாய் நிற்பதைக் கர்ணன் தெரிந்து கொண்டு அவனை வணங்க, இது பீமன் கண்ணில் படுகிறது. உடனே, ‘ஓ! உன் அப்பன் தேர்ப்பாகனா?-நீ தேரோட்டி மகனா? என்று தொந்தி குலுங்கச் சிரித்தான்;