பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 327 கெக்கலிக்கிறது கான்! உயிர்த் தோழனே! வாழ்க்கையில்... வீரம் வெல்லாததை சோரம் வெல்லும்; உன்திறம் வெல்லாததை தந்திரம் வெல்லும்! (1-பக். 262-63) நரியின் தந்திரம்: என் இனிய நண்பனே! எலியே! நீ கலைமானின் காலைக்கடி! வலி மண்டும்; மான் நொண்டும்! என் பிரிய நண்பனே! புலியே! 蓝一 நொண்டிய மானை நொடியில் பிடி! மரநிழலில் மான் இளைப்பாறுகையில்... அதன் ஆடுசதையை எலி கடித்தது; சுளுவாய் புலி அடித்தது; தரையில் விழுந்தது மரை, நெடுநாள் எதிர்பார்த்திருந்த இரை!