பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 339 பெயர் திலோத்தனம்; ” ஆண் மனத்தை பொசுக்கும் திராவகப் பதுமை! இவள் பொருட்டுஇரு சகோதரர்களானசுந்தனும் உபசுந்தனும்சண்டையிட்டனர்; சாவைத் தொட்டனர்! உதிஷ்டிரனே! இதுபோல்உங்களுக்கும். திரெளபதியால்-மனம் திரியக்கூடும்! திரிந்தால்-நீங்கள் பிரியக் கூடும்! ஆதலால்... அதற்கு இடந்தாது-ஓர் ஏறபாடடை இப்பொழுது வகுத்தல் நலம்; இல்லையேல் வரும் சஞ்சலம்! நாரதன்-இங்ங்ணம் நவின்றதும். தருமன் சிந்தித்தான்; உடனே தம்பியரை சந்தித்தான்! (I-பக். 16-18) செய்துகொண்டஏற்படு-இது: 3 திலம் எள். நான்முகன் தான் படைத்த அழகிய நங்கையர் அனை வரிடத்திலுமிருந்து எள் அளவு வீதம் அழகை எடுத்து வந்து அவற்றை ஒன்று சேர்த்து அழகிய மங்கையாக உருவமைத்தான். இவள் திலோத்தமை என்பது நான் படித்து அறிந்த செய்தி.