பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பாகுபாடு செய்வது இயலாததாகின்றது. சுவை நிறைந்த மாம்பழத்தைத் தின்ற ஒருவன் அதன் சுவையைப் பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆனால் அதன் சுவையைப் பிறரால் உணரச் செய்வது இயலாது. பிறரும் அம்மாம் பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி அதன் சுவையை உணர முடியாது. இரசமும் அந்த வகையைச் சார்ந்ததே. இரசம் ஒருவருடைய அநுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக் கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் இரசநிலையை வைத்துக்கொண்டு அதனை வகுத்துக் காட்ட முற்படாமல் இரசத்திற்கு முன்னிலையாகின்ற உணர்ச்சியினை வைத்து இரசங்களையும் பிரித்தனர். அவர்கள் உணர்ச்சிகளை ஒன்பதாக வகுத்துள்ளனர். நம் மனத்திற்குத் தோன்றக் கூடிய எண்ணற்ற உணர்ச்சிகள் இந்த ஒன்பது பிரிவுக்குள் அடங்கும் என்பது அவர்கள் கருத்து; அவற்றிற்குப் புறம்பான மனநிலையே இல்லை என்பது அவர்களுடைய துணிவு. உலகப் பொருள்கள் எவ்விதமான மனோபாவங்களை எழுப்பினும் அவற்றை இந்த ஒன்பதற்குள் ஒன்றாகவே பாகுபாடு செய்துவிடலாம். ஒன்பது சுவைகட்கும் தனித்தனிப் பெயர்களிட்டுள்ளனர் அவர்கள். அவை: வடமொழி தமிழ் 1. சிருங்காரம் 愛-6)」63)@ 2. கருணம் அழுகை 3. வீரம் பெருமிதம் 4. ரெளத்திரம் வெகுளி 5. ஹாஸ்யம் நகை 6. பயானகம் அச்சம் 7. பீபத்லம் இழிவரல் 8. அற்புதம் மருட்கை 9. சாந்தம் (நடுவு நிலை) என்று தமிழிலும் வடமொழியிலும் வழங்கப்பெறும்.