பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o சுவைகளின் நிறம் * 371 (ii) கண்ணில்லாக் காவலனுக்கு அந்தப்புரத்தில் பணிவிடை புரிய வணிகர் குலமங்கையொருத்தி பணிக்கப் பெற்றிருந்தாள். வனப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லும்படியாகத் திகழ்ந்த மங்கை அவள். வாலியார் இவளது அழகைச் சுவைக்க முடியாத விழியிலான் நிலையைக் குறிப்பிடும்போது, சதுர்முகன் செருக்கோடு செதுக்கிய சிருஷ்டி, அந்த சிருஷ்டியை ரசிக்க திருதராஷ்டிரனுக்கு-ஏது திருஷ்டி? எனினும். காமத்திற்குக் கண்ணெதற்கு? கண்ணிலா மன்னனால் கருவுற்றாள்-அந்தப் பெண் விளக்கு! (1-பக். 269) கவிதையின் இறுதிப் பகுதியிலுள் உள்ள காமத்திற்குக் கண் எதற்கு? என்பதிலுள்ள வாலியாரின் நகைச்சுவைக் குறிப்பை துணுகியறிந்து மகிழவேண்டும். 2. வெகுளிச் சுவை : இது குரோதம் காரணமாக பிறக்கும் என்பதை மேலே கண்டோம். கவிஞர் வாலி இதனை ஐந்து பேரிடம் பிறக்கச் செய்கின்றார். (i) நாகம்: நிலாச்சாப்பாடு நடைபெற்ற நாளன்று நஞ்சு கலக்கப் பெற்ற பாலடிசிலைத் தன் கையாலே வீமனுக்கு ஊட்டிய துரியன் அவன் மயங்கியதும் காட்டுக் கொடிகளால் கட்டி கங்கை நீர்க்குள் சூலங்கள் நட்டிருந்த இடத்தில் உருட்டித் தள்ளினான். வீமனின் விதி சூலங்களின் மீது விழாமல் காத்தது. ஆனால் நீரில் இருந்த