பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கொண்டைச் சேவல் கூவுமுன்-அவன் கும்பிக்குள்ளிருந்து-ஒரு சண்டைச் சேவ்ல் கூவியிருக்கும்சோறு கேட்டு; - கேட்டவுடன் போடாவிட்டால்குடல்களைத் தின்றுவிடும் அது கொஞ்சம் கொஞ்சமாககொத்திக் கூறுபோட்டு! பலருக்குப் பசி வந்தால்பத்தும் பறக்கும்; பீமனுக்குப் பசிவந்தால்பாதம் பறக்கும்! கர்த்தபம் கெட்டால் குட்டிச் சுவரு; வீமன் கெட்டால் வட்டிச் சோறு! தருமனே!-என் தமையனே! உனக்கும் எனக்கும் ஒரு சாண் வயிறு: உம்பிக்கு உள்ளது உப்பு நீர்க் கிணறு! அரண்மனைக்குப் போனால் அங்கே நீ பார்க்கலாம். அன்னக்குவியலை அள்ளி விழுங்கும்-உன் அன்புக் குவியலை! (1-பக். 179) கவிஞர் வாலி இதற்குமேல் நகைச்சுவையைத் துரியன் வாயிலிருந்து பிறக்க வைக்க விரும்பவில்லை. அவனுக்குத் தகுந்தவாறு அளந்து போட்டுவிட்டார்.