பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 369 இரசம்பற்றிய இன்னோரன்ன முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு வாலியாரின் பாண்டவர் பூமியில் உள்ள சுவைகளை நோக்குவோம். 1. நகைச்சுவை தொல்காப்பியர் இதனை முதற்சுவை எனக் குறிப்பிட்டுள்ளார். மனிதன் ஒருவனுக்குத்தான் 'சிரிக்கும் பண்பு இருப்பதாகக் கூறுவர். ஆனால் ஆஸ்திரேலியாவில் Laughing lakas என்ற கழுதையும் சிரிப்புப் பண்பு உடையது என்று எங்கோ ஒர் உளவியல் நூலில் படித்ததாக நினைவு. பொறாமை முதலிய தீய குணங்கள் உள்ளவர்கட்கு நகைச்சுவை அரிதாகத்தான் ஏற்படும். ஒரு சமயம் துரியோதனனிடம் இது தோன்று கின்றது-கிண்டல் பாவனையில், () நிலாச்சாப்பாடு முடிந்த மறுநாள் பீமன் காணப் படவில்லை. கட்டைவிரலைக் காணாமல் ஒரு கைவிரல் நான்கும் கவலைப்பட்டன என்று சுவையாகக் கூறுவர் வாலியார். நால்வரின் கவலையை, குந்தி குமுறுகின்றாள். எப்பொழுதும் முதலில் விழிப்பது தருமன். ஆனால் சாப்பாடு முடிந்த மறுநாள் அதிகாலையில் தருமன் எழுந்ததும் வீமனைக் காணவில்லை. என்ன ஆனான்:வீமன் எங்குப் போனான்? என்று கவலையுடன் தருமன் துரியோதனனை வினவ, அவன் நகைச்சுவை துணுக்கு ஒன்றை நக்கலாக தூக்கிப் போடுகின்றான். இது இலக்கணப்படி நகைச்சுவைக்குப் பொருந்தாது எனினும், துரியோதனனிடம் இதற்குமேல் எழாது என்பதால் நாம் ஒரளவு இதனை நகைச்சுவையாகவே கொள்வோம். அவன் உதிர்ந்த துணுக்கு இது. “தருமா!-உனக்குத் தம்பிமேல் ஆசை, உன் தம்பிக்கு-அவன் Ginti Gini Ayos! 1. பா. பூ, பாகம்-2 பக். 219.224