பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 373 இங்கு இரண்டு நாகங்களின் வெகுளி காட்டப் பெறுகின்றது. (ii) பீமன்: அரக்கு மாளிகையிலிருந்து தப்பி நெடுந்துாரம் நடந்து மரக்கலம் ஏறி மந்தாகினியையும் கடந்து இரண்டடி எடுத்து வைக்க திராணியுமின்றி ஒர் ஆலமரத்தின் நிழலில் பாண்டவர்கள் தங்கியிருந்த பொழுது மற்றவர் உறங்க வீமன் மட்டிலும் உறங்காது காத்திருந்தான். வீமனின் மனம் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு வெகுளியில் பேசலானான். இதோ! இங்கு துயில்கின்ற-என் தமையன் தருமன்-எனக்குத் தாயைப் போன்றவன்; மகா தருமிஷ்டன்; தூசுதும்பற்ற தீயைப் போன்றவன்! இந்த நெருப்புக்கு நெருப்பு வைக்க முயன்றாளே 5ssou செருப்புக்கு சமானமாகாத சுயோதனன்; தன் சுவாதீனம் அற்று சகுனியின் காலடியில்-ஒரு சுவானம் போலிருக்கும் ஈனன் என் தாய், தமையன்; தம்பியர் தவிக்க-அந்த நாய் தவிசு கொள்ள நான் விடுவதா! வெய்யிலை வெந்நீர் சுடுவதா?