பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு துரியோதனனே! துள்ளாதே! எங்களைஎரித்து விட்டதாய்எள்ளாதே! தருக்கியே! நீதாயின்... குடல் வழி வருகையில்ஜடம்; பின்புகுடம் வழி வருகையில் விடம்! என் அண்ணன்-என்னை அனுமதித்தால்... ஒரு சில நொடிகளில் உன்னைச் சாப்பிடுவேன்; அப்பொழுதும் அடங்காத பசிகொண்டு... கர்ணனையும் சகுனியையும் கைதட்டிக் கூப்பிடுவேன் ! உங்களை உண்டு உமிழ்வேன்; அதன் பின்பே அமைதியில் அமிழ்வேன்; ஆனால்-என் அண்ணன் மனம் அதற்கு ஒப்பாது; ஒப்பினால் உங்கள் தலை தப்பாது! (I-பக். 289-90) இங்ங்னம் பீமன் பிச்சேறியவன்போல் தனக் குள் புலம்புவதை-வெகுளி ததும்பப் புலம்புவதை-வாலியார் மிகஅற்புதமாகக் காட்டுகின்றார். பாசுரப் பகுதியில்