பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மலர்மாலையின் மேன்மையறியா மர்க்கடம்; கர்ப்பூர வாசமறிந்திடாத கர்த்தபம்! (II — L15. 121-122) இவ்வாறு சகுனியைத் திருதராட்டிரன் திட்டித் தீர்ப்பதில் அவனது சினம் வீறிட்டெழுவதைக் காணமுடிகின்றது. (vi) திரெளபதி: பூஞ்சோலையினின்றும் சகாதேவ னோடு கண்ணன் நீங்க பாஞ்சாலி நேரில் நின்று சினம் வெடிக்கப் பேசுகின்றாள் மொத்தம் பொத்திப் பொத்திப் பதின்மூன்று ஆண்டுகள் வைத்திருக்கும் கோபத்தைக் காட்டுகின்றாள். பொட்டை ஒருவன்-பெற்ற பொட்டை ஒருவன்-என் புடைவை உரிக்க-ஈனப் புழுக்கள் சிரிக்க... கண்ணா! என நான்கதறிய நாளில்-வந்துதவிய அண்ணா! அச்சா! ஆபத் சகாயா! பதின்மூன்று ஆண்டுகள்-நான் பொத்திப் பொத்தி வைத்திருக்கும். கோபம் என்னகொழுந்து வெற்றிலையாஉடனே கிள்ளி எறிய? கானகத்தில் காய் கிழங்கைத் தின்றுகாலங்கழித்தேன்-உள்ளே ஒரு கொள்ளி எரிய! பாவி துரியனும்-அவன்