பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 389 6. வியப்புச் சுவை. இதுவே அற்புதச் சுவை என்பது. தொல்காப்பியர் இதனை மருட்கை என வழங்குவர். தனஞ்சயன் உத்தரனை நோக்கிப் பேசுவது: 'உனக்கு உதறலெடுத்தால்.... போர் நடத்த வேண்டாம் நீ தேர் நடத்து-துரகங்களின் வார்பிடித்து; பொருதுவேன் நான் வில் பிடித்து! (II — u$. 278) பின்னர் விசயன் விதித்தபடி மணித்தேரை மயானப் பக்கம் விட்டு அதன் மையத்தில் உள்ள வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுத மூட்டையை அவிழ்க்க காண்டீபத்தில் ஒளியில் உத்தரன் தலையைக் கவிழ்த்தான். அவனுக்கு இவை யாவும் பஞ்சபாண்டவரின் படைக்கலம் என்றும் அவர்கள் உத்தரனின் பிதாவிடம் அடைக்கலம் என்றும் விளக்கினான்; வியப்பெய்தினான் விராடனின் பிள்ளை. இந்த வியப்பைக் கவிஞர் வாலி, ‘....03:23, 14 பெப்ரவரி 2016 (UTC)~~எச்சிலை மென்று விழுங்கி-உத்தரன் மயங்கினான்! (II-Lö. 279) என்று தன் கவிதையில் கூறுவார். தொடர்ந்து விளக்குவது: 'விராடன் மகனே! இனி நாங்கள் வெளிச்சத்திற்கு வரலாம்; பன்னிரு மாதங்கள்-நேற்றோடு பூர்த்தியானதால் நாங்கள் யாரென்ற விவரத்தை நாங்களே தரலாம்! உந்தையோடு உட்கார்ந்து