பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 393 என் இல்லை-உன்போல் இங்ங்ணம் சிதைத்தார்இல்லை! என் மகனையும் பறித்தாய்-நீ மண்ணாகிப் போவாய், ஒருநோவு வந்து-நீயும் சாவு வந்து சாவாய்! காற்றுக்குப் பிறந்தவன்காற்றுக்கு வழியின்றிகூற்றுக்கு இரையாவதா-இங்கு விதி வகுத்ததேவாழ்க்கையென்றால்-பின் வெறுங்கல்லென இறையாவதா? ( - பக். 180-182) இங்குக் குந்திக் கவலையில் மூழ்குகின்றாள். பிச்சேறி அழுகின்றாள். விதியை நொந்து கொள்ளுகின்றாள். அதனைச் சபிக்கவும் செய்கின்றாள். இறைவனே கல்லா? என்று கருதும் நிலைக்கு வந்துவிடுகின்றாள். இப்பகுதியை அழுகைச் சுவைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். 9. சாந்தச்சுவை. இந்த சாந்தரசம் உலகியலின் நீங்கினார் பெற்றியராகவின் அதனையொழித்து ஏனைய எட்டனையுமே பரதமுனிவர் தம் நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவ்வாறே எண்சுவை யையே கூறுவர். பாண்டவர்களின் வனவாசத்தைப் பற்றிப் பேசும் கவிஞர் வாலி: வெள்ளி நிலா வம்சத்தின்... 4 தொல். பொருள். மெய்ப். நூற் 3