பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒரு விநோதன்-என விவரமறியார் பேசும்-தரும வியாதன்! (II — u&. 218) இதைப் படிப்போருக்குக் கசாப்புக் கடை அருவருப்பை (ஜூகுப்லையை)த் தருவதால் இது பீபத்ளலத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து விடுகின்றது. 8. அழுகைச்சுவை இதனை வடமொழியில் கருணம்’ என வழங்குவர். இதற்கும் பாண்டவர் பூமியில் இடம் காண்பது அரிதாகவே உள்ளது. நிலாச்சாப்பாடு முடிந்த மறுநாள் அதிகாலையில் வீமன் காணப் பெறவில்லை. இந்நிலையைக் குந்தி அறிகின்றாள். சென்றது ஐவர்; மீண்டது நால்வர்; பெற்றவள் குடலை-மாவாய்ப் பிசைந்தது கவலை! பிரமைபிடித்தவள் போல்-குந்தி பிச்சேறி நின்றாள்; பின்விதியைவினைப் பயனை-தன் வாயில் போட்டுமென்றாள்! "பொல்லா விதியே! ஈவும் இரக்கமும்இல்லா விதியே! என்பொட்டைப் பறித்தாய்; பூவைப் பறித்தாய்; பொட்டும் பூவும் தந்ததேவைப் பறித்தாய்!