பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 391 விழுந்தான் உத்தரன்; விராடன் புத்திரன்! என்பதாக விழுந்தது வியப்பினால், இந்த வியப்பு அவனை, 'தனஞ்சயா! உன் தம்பிபோல் எனை நீ மன்னி; س5f5;T தமையன் போல் நீ உன் தாரம்தான் எனக்கு மன்னி! என்று பேச வைக்கின்றது. இங்ங்னமாக, காவியத்தில் வியப்புச் சுவை அமைகின்றது. 7. இழிவரல் சுவை இழிவரல் என்ற சொல்லைத் தொல்காப்பியர் வழங்குவது. வடமொழியில் இச்சுவை “பீபத்ளலம் என வழங்கப் பெறுகின்றது. இதற்குப் பாண்டவர் பூமியில் எடுக்காட்டு சுட்டுதல் அரிதாகவே உள்ளது. கவுசிகன் தருமவியாதனைக் காண மிதிலைக் குச் செல்லுகின்றான்

            • -----தரும் வியாதனைக் கண்டு; விதிர் விதிர்த்து நின்றான்! வாடிக்கையாளர்க்குவிற்றுக் கொண்டிருந்தான்...

மாடு; மறி; மான்; மகிஷம்; இவற்றின்-ஈர இறைச்சிகளைஎடைபோட்டு-கசாப்புக் கடை போட்டு.