பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் – 8 [9ಾ; T] "தூது போனவன் ஏற்றம் சொல்லுவது பாரதம்" என்பது ரீவசனபூஷண வாக்கியம். ஆரண்யவாசம் அஞ்ஞாத வாசம் அனைத்தும் முடிந்தன. அவை கூடி இனி நடக்க வேண்டியதை ஆய்ந்தனர். துருபதனின் புரோகிதனைத் தூது அனுப்புவதாக அவை அங்கீகரித்தது. இது முதல் தூது. இவன் சொன்ன செய்தி: 'உரிய பங்கைஉதிஷ்டிரன் உங்களிடம். இரந்துதான் பெற வேண்டும்; அதை நீங்கள்இறந்துதான் பெற வேண்டும்எனப் பண்ணாதீர்! (I-பக். 324) இதனைச் செவிமடுத்த கங்கை மைந்தன், 'தருமன் பங்கைதருவதே நன்று மறுத்துஉரைப்பது அவ்வளவுஉசிதம் அன்று! (11-பக். 324) என்று கூற வெகுண்டான் கதிரின் மைந்தன். 'கவறாடித் தோற்றதை-ஒருவன் கூச்சின்றி தரும்படிக் கேட்டால்.... அந்தணனே! நீஅவன் முகத்தில்1 வில்லிபாரதம் இவன் பெயர் உலுகன் எனக் குறிப்பிடுகின்றது. அங்கு தருமன் தூது அனுப்பியதாக உள்ளது.