பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'து'வெனத் துப்பாதுதூதுவருவதோ தப்பாது? சமாதான யோசனையை-என் சித்தம் ஒப்பாது; என்வாள்உறையில் உறங்காது-விஜயன் உதிரம் சப்பாது, துரியன் உப்புக்கு நன்றியுள்ள வாய்ஒப்புக்கு எதையும் செப்பாது; தோழன் முகத்தில்-ஒருநாளும் தோல்வியானது கரியை அப்பாது! (1-பக். 324) விவகாரம் முற்றுவதை விழியிலா வேந்தன் உணர்ந்து வேதியனைத் திருப்பி அனுப்பிவிட்டான். தான் சஞ்சயனைத்துதாக அனுப்பும் எண்ணத்தைத் தருமனிடம் சொல்லுமாறும் பணித்தான். சஞ்சயன் துரது இரண்டாவது. இவன் திருதராட்டி ரனின் இணைபிரியா நண்பன். கண்ணிலானுக்குக் கண்போல் செயற்படுபவன். இவன் கொண்டு வந்த செய்தி கண்ணிலான் இதயத்தையே காட்டுவது. நாளை போர் வந்தால்-தருமா! நீதான் வெல்வாய்-எனினும்நானொன்று கேட்கிறேன்-நீ நிஜத்தைச் சொல்வாய்! வாழலாம்-நீ வயதில் சதம்-ஆனால்விளக்கு எதுவாழ்வில் சதம்? இரணியன் வதம்; இராவணன் வதம்; இவைபுராணங்கள் இன்றளவும்