பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 403 கண்ணன் கழலினை பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டனர் கரும வினைதீர; கள்ளமற்ற மக்கள்-தம் கண்களில் நீர் சோர! (II - பக். 340) வீடுமனும் பிறரும் பெருமானைக் கண்டு பெருமளவு பரவசமாயினர். அவனை இட்டுக்கொண்டு திருதராட் டிரன் மாளிகைக் குச் சென்றனர். கண்ணிலானும் காந்தாரியும் தன்மேல் கண்மூடித்தனமான அன்பைக் காட்டுவது கண்டு தாமோதரன் தனக்குள் சிரித்துக் கொண்டான். பின்னர் அவர்களிடம் இவ்வாறு கூறினான்: எந்த வேலையை-நான் ஏற்றிங்கு வந்தேனோ அந்த வேலையை... செவ்வனே ஆற்ற முடியாமல். நீங்கள் சம்பந்தி-என நான் நினைப்பதும்; காலை மாலை-இங்கு கை நனைப்பதும்; அவ்வளவுஅழகல்ல; அது தீது, அறமஅர்த்தமற்றதாகும் தூது! நீயாயினும் சரி; பாண்டுவின்சேயாயினும் சரி; நான்-இருவர்க்கும் நடு இந்த- - நடுவிற்கு வரக்கூடாது-ஒரு வடு!