பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கோடுகின்ற மொழியவன்பால், எனைத்துது விடுகஇனி, கொற்ற வேந்தே! (17) மலைகண்ட தெனஎன்கை மறத்தண்டின் வலிகண்டும், மகவான் மைந்தன் சிலைகண்டும், இருவர்பொரும் திறல்கண்டும், எமக்காகத் திருமால் நின்ற நிலைகண்டும், இவள்விரித்த குழல்கண்டும்' இமைப்பொழுதில் நேரார் தம்மைக் கொலைகண்டு மகிழாமல், அவன்குடைக்கீழ் உயிர்வாழக் குறிக்கின் றாயே, (18) இரண்டிலும் வீமனிடம் குமுறி எழும் உணர்ச்சிப் பிழம்பை ஒப்பிட்டு நாமும் உணர்ச்சிமயமாகலாம். கண்ணன் துதுபற்றிய அமைப்புகள் இரண்டிலும் ஒன்று போலிருப்பதையும் காணலாம். கண்ணபிரான் அத்தினபுரத்திற்கு வருகிறான் என்ற தகவல் விழியிலான் காதிற்கு எட்டவும் அவன் கட்டளைப் படி ஊர் தேவகிமைந்தனை வரவேற்கத் தயாராகின்றது. தன் மகன் துரியனுக்கும் நேரில் சென்று வரவேற்குமாறு சொல்லுகிறான். ஆனால் தாய்மாமன் நரியன் தடுக்க அவன, அழுக்குக் கூடையில் அப்பன் சொல்லைப் போட்டான்! எனவே-துரியன் எட்டெழுத்தானை எதிர்கொள-ஊர் எல்லைக்குப் போகவில்லை. (11-பக். 340) ஊர் மக்கள் வரவேற்றனர்; அவனைக் கடவுளாக எண்ணினர். - 3 வில்லிபாரதம்-கிருட்டிணன் தூது 11, 12, 17, 18.