பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 401 துடை பிளந்து-நான் துரியனைச் சேய்யவேண்டும்துவம்சம்; இல்லையேல்துலங்காது நம் வம்சம்!” (II - பக். 330-31) இதனைப் படித்து உணர்ச்சிப் பெருக்கில் திளைக்கும் நாம் வில்லி பாரதத்தில் வீமன் பேச்சையும் காண்போம். விரிகுழல்பைந் தொடிநாணி வேத்தவையில் முறையிடுநாள் வெகுளேல்!” என்று, மரபினுக்கும் நமக்கும்.உலகு உள்ளவும், தீராத வசையே கண்டாய்! எரிதழல்கா னகம்அகன்றும் இன்னமும்வெம் பகைமுடிக்க இளையா நின்றாய்! அரவுஉயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய்! உனதுஅருளுக்கு அஞ்சி னேனே! (1) கான்ஆள உனைவிடுத்த கண்இலா அருளிலிதன் காதல் மைந்தன் தான்.ஆளும் தரணிஎலாம் ஒருகுடைக்கீழ் நீஆளத் தருவன், இன்றே: மேல்நாள் நம் உரிமை,அறக் கவர்ந்தபெருந் துணைவன், உனைவெறாத வண்ணம் வான்ஆள வானவர்கோன் தன்பதம் மற்று அவன்தனக்கே வழங்கு வேனே. (12) தருமன் அவனைக் கையமர்த்தி சமாதானம் செய்யவும், அதற்கும் பொறாமல் போரையே வற்புறுத்துகின்றான். சூடுகின்ற துழாய்முடியோன், சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் தேடுகின்ற பதம்சிவப்ப, திருநாடு பெறத்தூது செல்ல வேண்டா; வாடுகின்ற மடப்பாவை தன்வரமும், என்வரமும் வழுவா வண்ணம்,