பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 407 'முன்ன மேதுயின்று அருளிய முதுபயோ ததியோ? பன்ன காதிபப் பாயலோ? பச்சைஆல் இலையோ? சொன்ன நால்வகைச் சுருதியோ? கருதிநீ எய்தற்கு என்ன மாதவம் செய்தது.இச் சிறுகுடில்! என்றான் (78) 'மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும் எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்; அம்ம!’ என்றனன்; ஆறுநூ றாயிரம் மடையர் தம்மை நோக்கினன்; அவர்களும் விரைவுடன் சமைத்தார்: (79) இங்குக் கண்ணன்மீது விதுரன் கொண்டிருந்த ஈடுபாடு, பக்தி முதலியவை புலனாகின்றன. ஒருநாள் கண்ணன் விதுரன் வீட்டில் தங்கிவிட்டான். சகுனியின் சதிப்படி கண்ணனுக்குப் பொய்யாசனம் அமைக்கப்பெற்று, அவளை நிலவறைக்குத் தள்ளிக் கொல்லத் திட்டம் தயாராகிவிட்டது. காற்றுவாக்கில் கேள்வியுற்ற இச்செய்தியை வாசுதேவன் காதில் போட்டான் விதுரன். மறுநாள் மாயக் கண்ணன் துரியோதனனின் அவைக்கு வருகிறான் அடலேறுபோல். தன் கருத்தை இடியேறு போல் இயம்புகிறான். அவன் கூறிய செய்தி: 5 வில்லிபாரதம்-கிருட்டிணன் தூது:இங்கு விதுரன் மனைவிபற்றிப் பேச்சே இல்லை-அவன் மாணி என்பதால்.