பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் தூது : 411 வேண்டியவர்க்கு ஒரு நீதி; வேண்டாதவர்க்கு ஒரு நீதி, நீஒரு கண்ணில் வெண்ணெய் வைத்து மறுகண்ணில் வைப்பாய் மண்ணை ! இதோ! இறுதியாகச் சொல்கிறேன்... பங்காளிகளானபாண்டவர்க்கு... ஊசிமுனை நிலங்கூடஉதவமாட்டேன்; ஈயிருக்கும் இடம்கூடஈயமாட்டேன் ! செல்லுக; சென்றுசொல்லுக! (II— ué. 347) வாலியார் கண்ணன் தூதினை இத்துடன் முடித்து விடுகின்றார். வில்லியில் கண்ணன் மேலும் பேசுகின்றான். அப்பேச்சு உள்ளத்தை உருக்கும் பாங்கில் அமைந்துள்ளது. துரியோதனின் இந்த வாழ்வுக்கு வீடுமனே என்று சுட்டிக் காட்டுகின்றான். தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய்பயந்தஇரு தம்பியர் இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின்குலத்து ஒருவன் இங்குஉளான்; முந்த மாநிலம் அனைத்தி னுக்கும் உயர்முறை மையால் உரிய அரசருக்கு ஐந்து மாநகரும் நீகொடா தொழியின் என்ன தாகும் உணதரசியல் ? பாடலைப் பன்முறை படித்தால் கண்ணன் குத்திக் காட்டுவது தெரியும். 7 வில்லிபாரதம்கிருட்டினன் தூது-115