பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'நந்தகுமாரனே! நீ நின்று கொண்டு பேச அமர்ந்திருப்பதோ நான் ஆதி அந்தம் கூச? இதோ! இந்த ஆசனத்தில் அமர்ந்து கொள்; என் ஆட்சேபனைக்குப் பதில் சொல்! (I-பக். 346) துரியன் கேட்டுக்கொண்டபடி துவரைநாதன் அந்த மிகு ஆசனத்தில் அமர்கின்றான் துளசி இலையை மென்ற படி துரியன் அடக்கமாக-ஆனால் ஆணித்தரமாகவினவுகிறான் அச்சுதனை நோக்கி: 'கண்ணா! தருமன் கைக் குழந்தையா என்ன கிலுகிலுப்பை ஆட்டிக் கிட்டத்தில் வரவழைக்க! கவறாடக் கூப்பிட்டால் "கூடாது! பிசகு!’ என்று கூறியிருக்கலாமே-எங்கள் குலப்பெருமை பிழைக்க! இஷ்டப்பட்டுதானே ஆடினான்? இஷ்டமில்லாமலா கூடினான்? 'ஆடுவது தவறு! என அறியாதாஆடினான் கவறு? தருமன் தோற்காமல்-இந்தத் துரியன் தோற்றிருந்தால்... தோற்றது தோற்றதுதான்! என்று துரத்தியிருப்பாய் என்னை; தேவகி மைந்தனே! எனக்குத் தெரியாதா என்ன உன்னை?