பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 409 நாட்டை. 'சூதால்-நீ செயித்தாய்! என்று! நீ சொல்லும் சூதுக்கு நீ குறிக்கும் பொருள் கவறு!” நான் சொல்லும் சூதுக்குநான் குறிக்கும் பொருள் கவடு! ஒரே எழுத்துதான்வித்தியாசம்; எனினும்வித்தியாசமின்றி-இரண்டுமே விளைக்கும் நாசம்! துரியனே! தாய்மாமன் மகுடியில்-ஆடும் விரியனே! சந்திரகுலம்சருவநாசம் ஆகுமுன்தடுக்க வந்தேன்; எச்சரிக்கை விடுக்க வந்தேன் ! இன்னமும் இருக்கிறது அவகாசம்; பங்காளிகளுக்குப் பங்காய்க் கொடு பாதிதேசம்! இஷ்டம் இல்லையென்றால்... ஐந்து ஊர்கள் கொடு; அல்லது ஐந்து வீடுகள் கொடு; அதுவும் முடியாதெனில்-போர் மூளும்; உயிரைக் கொடு! (I-பக். 344-46) கண்ணன் இவ்வாறு கர்ண கடுரமாகப் பேசி முடித்ததும் சர்ப்பக் கொடியோன் சாந்தமாகப்-பார்க்க மிகவும் பாந்தமாகப்-பேசுகிறான். அவன் பேச்சு இது: