பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கன்னன் இருவரங்களையும் தந்தமையை வில்லியார், தெறுகணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செருச்செய்வோன் சென்னியோடு இருந்தால், மறுகணை தொடுப்பது ஆண்மையோ? வலியோ, மானமோ? மன்னவர்க்கு அறமோ? உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன், ஒழிந்துளோர் உய்வர்என்று உரைத்தான் தறுகணர் அவர்க்கும், தறுகண்ஆ னவர்க்கும் தண்ணளி நிறைந்தசெங் கண்ணான். ' கன்னனும் கண்ணான அன்னையிடம் இரு வரங்கள் பெறுகின்றான். இதனை வில்லியார்: பெருவரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்றதா யினைக்கரம் குவித்து, “தருவரம் எனக்கும் இரண்டுஉள; உலகில் சராசரங் களுக்குஎலாம் தாயீர்! வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனியர் அறிய மருவரும் முலைப்பால் எனக்களித்து உம்தம் மகன்எனும் வாய்மையும் உரைப்பீர் : 'உய்வுஅருந் திறல்வெம் போர்முடிப்பு அளவும் உமக்குநான் மகன்எனும் தன்மை ஐவரும் அறியா வண்ணம்நீர் காப்பீர்; அல்லது,அங்கு அவர் சிறிதுஅறியின் மைவரும் கடற்பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர்; வழங்கினால் யான்என் கைவரும் துணைவன் தனக்குஅலால் வழங்கேன், கடைப்பிடி, கருமம்ஈது என்றான் 11 மேலது.256 12 மேலது.257. இதனால் தேரோட்டியின் மகன் என்ற இழிசொல்' இல்லையாகிறது. 13 மேலது.258