பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (3) இந்திரனை அனுப்பி கன்னனின் கவசகுண்ட லங்களை வாங்கு மாறு கூறுகின்றான்." வில்லியார் பாடல்களில் இதனைக் காண்போம். கண்ணன் கூறும் முறையைத் தெரிவிக்கும் பாடல்கள்: கன்னன் விசயன்தனைக் கொல்லின் கடல்பார் முழுதும் கண்இல்லா மன்னன் புதல்வன் தனக்கேஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் முன்னம் சூதில் மொழிந்தபகை முடியாது இருக்கின் அவர்க்குஅன்று; நின்நெஞ்சு அறிய, யான்அறிய நினக்கே வசையும் நிலையாமே. (230) கவசம் கனக குண்டலம்என்று இரண்டு புனையின், கற்பாந்த திவசம் பொரினும் கன்னன்.உயிர் செகுப்பார் மண்ணில் சிலர்உண்டோ? அவசம் கிளைஞர் உறதுணைவர் அரற்ற களத்தில் அடுகுரக்குத் துவசம் படைத்தோன் படும்;பயந்த துணைவா! இன்னே சொன்னேனே. (231) மைந்தற்கு உறுதி நீவேண்டின், வல்லே முனிவர் வடிவுஆகி, சந்தப் பனுவல் இசைமாலைத் தானாகரனை விணந்து எய்தி, 'அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்! என்றால், அவன்ஒன்றும் இந்தப் புவியில் மறுத்து அறியான், உயிரேஎனினும் ஈந்திடுவான். (233) 16 இது வில்லிபாரதத்தில் கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில் வருவது. வாலியார் இந்நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காட்டுவார்.