பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது & 417 இரண்டும் அவன்பால் நீகவரின், இருந்தேர் ஊர்ந்துஇப் படிஅரசர், திரண்டு வரினும் வெஞ்சமரின் திண்தேர் விசயன் எதிர்நில்லார்; முரண்டு பொருவில் கன்னனும்தன் முன்னே எய்தி, முடிசிதறி, புரண்டு மறியும் என,வணங்கி, புத்தேள் அரசன் போகின்றான்! (234)" இந்திரன் ஒரு படுகிழமுனி வடிவங்கொண்டு, கதிரவன் புதல்வன் முன்சென்று, அவனைப் புகழ்ந்து நிற்க, அவனுக்கு பொன்னின் ஆசனம் நல்கி மரியாதை செய்தான் கதிரவன் மைந்தன்; கேட்டவற்றைத் தருவ தாகவும் உறுதி கூறுகின்றான். வந்த அந்தணன் கவசகுண் டலங்களை வாங்கிநீ வழங்குஎனக்கு! என்ன, 'தந்தனன்பெறுக! எனஅவன் வழங்க; தலத்தில்ஒர் தனிஅச ரீரி, 'இந்தி ரன்தனை விரகினால் மாயவன் ஏவினான்; வழங்கல், நீ! எனவும், சிந்தை யின்கண்ஒர் களங்கம்அற்று அளித்தனன், செஞ்சுடர்த் தினகரன் சிறுவன் (239) (விரகு-தந்திரம், மாயவன்-கண்ணன்; கலக்கம்வருத்தம்) இந்திரன் தன் வேடத்தைக் களைந்து நிற்க, கன்னன் அவனைக் கண்டு மனம் உருகிக் களித்திடுகின்றான். ஆயிரங் கண்ணனும் கன்னனுக்கு ஒரு கொற்றவேல் வழங்குகிறான். இது பாரதப் போரில் கடோற்கஜனை மாய்க்க உதவுகிறது (கண்ணனின் திட்டம் இது). 17 வில்லிபாரதம்-கிருட்டிணன் தூது.