பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு உறியார் வெண்ணெய் உண்டுர லோடும் கட்டுண்டு வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஒளியா வெண்ணெய் உண்டானென்று உரலோ டாய்ச்சி ஒண்கயிற்றால் விளியா, ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் என்பன போன்ற பாசுரங்கள் இதனை அரண் செய்யும். அழ்வார் பெருமக்கள் கண்ணன் வெண்ணெய் உண்டதை நேரில் பார்த்தாரிலர், மனக்கண்ணால் பார்த்திருக்க வேண்டும்-அநுபூதி பெற்றவர்களாதலின். அங்ங்னமே வாலியாரும் கண்ணனை அநுபூதி நிலையில் மனத்தில் கண்டு மண்ணைத் தின்றதையும் அதற்காகக் கட்டுண்டதை யும் பார்த்திருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறொன்றும் இல்லை. வாலியாரையும் ஆழ்வார் களனைய பக்தர் என்று கருதலாம். கண்ணனின் பலபல வீரச் செயல்களை நினைந்து தம் படைப்பில் களிக்கின்றார் வாலியார். ஒரு கால் நடை கொண்டுநுவலர்க்கரிய நாயகன்தான் கால் நடை கொண்டு கால்நடை மேய்த்தான் ! (1-பக். 144) கஞ்சன் அனுப்பிய பூதகி என்னும் அரக்கியைப் பற்றிய செய்தியைக் கூறுகிறார். 8 பெரி. திரு. 6.5: 4 9 பெரி. திரு. 67; 4 10 கால்நடை-காலால் நடக்கும் பிராணிகள் மனிதன் உட்பட. மினிதன், பிராணிகள், வண்டிவாகனம், பேருந்து, விமானம் முதலியவற்றில் பயணம் செய்கிறான். பிராணிகட்கு காலைத் தவிர வேறு வசதி இல்லை. அதனால் அவை கால்நடை என்ற பெயரையே பெறுகின்றன.