பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி * 441 வலக்கையில்வாங்கி நின்றான்சுடர்மிகு சுதர்சனம்; இடக்கையில்ஏந்தி நின்றான்பால்நிறப்பாஞ்ச சன்னியம்; தடக்கை மற்றொன்றில்தாங்கி நின்றான்சார்ங்கம் எனும் சாபம்; பிறிதொரு மணிக்கரத்தில்பற்றி நின்றான்கவின்மிகு கதாயுதம்! பாதாதிகேசம்பாய்ச்சிய பிரகாசம் பத்துத் திக்கிலும்பட்டொளி வீசியது; பகலவன்-கண்களைப் பொத்திக் கொண்டான்; பார்க்க முடியாமல்-அவன் பார்வை கூசியது! 'நாராயணா! நமோ நாராயணா' என பீஷ்மனும் பிறரும் போற்றித் தொழுதனர்; அளவிட அரிய ஆனந்தத்தால் அழுதனர்! (I-பக். 347-48) பின்னர் விசுவரூபத்தை நீங்கி யதார்த்த ரூபத்திற்குத் திரும்பி திருச்சபை விட்டு நீங்கினான். நாமும் விசுவரூப