பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10 (உண்மைகளும் படிப்பினைகளும் ஒரு காவியத்தைப் படிக்கும்போது நாம் கவிதை இன்பத்தில் திளைப்பதுடன் அக்காவியத்தில் கவிஞன் உணர்த்த விரும்பும் உண்மைகளையும் படிப்பினை களையும் அறிகின்றோம்; தெளிகின்றோம். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் தமிழ்க் கவிஞர்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதே இலக்கியத்தின் நோக்கம் என்ற கொள்கையினையுடையவர்களாக இருந்தனர் என்று கொள்ளலாம். உரத்தி வளம் பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கி பொல்லா-மரத்தின் கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோன் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு ! என்ற வெண்பாவால் இதனை நன்கு அறியலாம். இதனால் மக்களினத்தின் அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்துதலே. கவிதையின்-காவியத்தின்-முக்கியமுதன்மையான-வேலையாக இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது. கவிஞர் வாலியின் பாண்டவர் பூமியை இவற்றின் அடிப்படையில் நோக்குவோம். 1. வாழ்க்கை பற்றியவை வாழ்க்கைபற்றிய சில கருத்துகள் பாண்டவர் பூமியில் இழையோடுகின்றன. படிப்பவர்களின் மனத்திற்கு விருந்தாக அமைவதுடன் அவர்கள் நன்னெறிகளைச் சிந்திக்கவும் துணை செய்கின்றன. 1. நன்னூல்.25