பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 4 5 6 令 வாடகையாய் மரணத்தைவசூலிக்காது- - விட்டதில்லை இதுவரைவல்லான் ஒருவரை! இதுபோன்ற உபதேசங்களைத் தானும், விழியிலா வேந்தனும், விதுரனும் பீஷ்மனும் சொன்னதாக வாலியாரின் பதிவு. 2. விதி பற்றியவை ஆதிமனிதன்முதல் இன்றைய மனிதன் வரையில் உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களில் இடம் பெற்றிருப் பது விதி பற்றிய கருத்து. 'ஊழிற் பெருவலி யாவுள' என்பது வள்ளுவம். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுவதும் என்று சிலம்பு ஒலிக்கும். காவியங்கள் அனைத்திலும் விதி பற்றிய கருத்துக்கு இடம் வைக்கப் பெற்றுள்ளது. பாண்டவர் பூமியிலும் விதி பற்றிய கருத்துகள் பரந்துபட்டுக் கிடக்கின்றன. ( மான் வடிவங்கொண்டு புணர்ச்சி இன்பத்தில் ஈடுபட்டிருந்த முனிவரைப் பாண்டு அம்பெய்து கொல்லுகின்றான். பாண்டுவின் இறுதி வாழ்வு துறவறமாக அமைகின்றது. பீஷ்மன், 'பாண்டு-அவனது பூர்வ ஜன்ம ஊழ்வழி போகிறான்! (1-பக். 111) என்று முடிவு கட்டுகின்றான் திருதராட்டிரன். தம்பியின் நிலையை அறிந்து துக்கிக்கின்றான். இந்த இடத்தில் கவிஞன் கூற்றாக அமைகின்றது பிறப்பு பற்றிய கருத்து ஊழாக 4 குறள்-380 (ஊழ்)