பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 4.57 படிமிசை பிறப்பெய்தும்ஒவ்வொரு மனுவிற்கும்வாழ்வு ஒரு வழிநடையாகும்! எங்கெங்கே ஏற்றங்கள்; எங்கெங்கேஇறக்கங்கள்; எந்தெந்த திக்குகளில்என்னென்னதிருப்பங்கள். firsts ஏற்கெனவேயேஅவற்றை-ஒர் அட்டவணையாக்கி-அவன் கபாலவாசலில்-அதைக் கல்வெட்டாய்ப் பொறித்து... பிதகுதான் பன்னிர்க் குடத்தைப் பொத்து-அவனை பூமியில் இறக்குகிறது ஊழ்! (1-பக். 111) இங்கு ஊழ் என்பது பிராரத்தத்தைக் நுகர்வினையைக்) குறிக்கின்றது. தக்க இடத்தில் இதனை வாலியார் குறிப்பிட்டுக் காட்டுவது அற்புதம்! 5 வினைசஞ்சிதம் (பழவினை), பிராரத்தம் (நுகர்வினை), ஆகான்மியம் (எதிர்வினை) என மூவகையாகப் பிரித்துப் பேசுவர் தத்துவ அறிஞர். சஞ்சிதம்-பல பிறப்புகளில் சேர்ந்து அமைந்த தொகுதி. அத்தொகுதியினின்றும் பிராரத்தம் என்ற ஒரு பகுதி இந்த உடலாக அமைகின்றது. இது நுகர்வினை. இந்தப் பிறப்பில் ஈட்டும் தொகுதிதான் ஆகாமியம் (எதிர்வினை).