பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (2) மகரிஷி மாண்டவ்யரின் வினைப் பகுதியைக் காட்ட மூன்று திருடர்கள் வந்து பதுங்கினர் அவர்தம் ஆசிரமத்தில், அரண்மனையில் திருடிய ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி மாண்டவ்யரின் பர்ணசாலைக்குள் பத்திரப்படுத்தினர். அரண்மனைக் காவலர்க்ளால் மகரிஷி பிடிபட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றார் தருமதேவதையால், முனிவர் சிறுவயதில் வண்டுகளையும் பட்சிகளையும் வதைத்த வினை இதுவாக அமைந்தது என்று விளக்கப் பெறுகின்றது. வாலியார் இதனை: மகரிஷி மாண்டவ்யரின் முன்வினை மூவிரண்டு கால்களோடும் பொருள் மூட்டையைச் சுமந்த தோள்களோடும் மூச்சு இரைக்க இரைக்க-உப்பு வியர்வையை-உடம்பு வாளிநீர் போல்-வாரி இறைக்க இறைக்க ஓடிவந்து. அவரது பர்ணசாலைக்குள் புகுந்து கொண்டது; இதுதான் பத்திரமான இடம்! என்று புரிந்து கொண்டது! முன்வினையாய் முளைத்து வந்தது மூன்று திருடர்கள்; ஆறு விழிகளிருந்தும்-அறிவு வெளிச்சமில்லாத குருடர்கள்! என்று காட்டுவார். பிராரப்தம்' இறைவன் ஆணையால் செயற்படுவதால் சாதாரண ஆள், அரசன், முனிவர்