பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 459 \– என்றவர்களிடம் வேறுபாடு காட்டாமல் நடை பெறுகின்றது என்பது ஈண்டு அறியப்படும். (3) துரியோதனனும் பீமனும் ஒரே நாளில் பிறந்தனர் என்பதைக் கூறும் கவிதைப் பகுதி இது நன்றும் தீதும்-ஒரே நாளில் தோன்றிஒன்றையொன்று பொன்றும் வகையில்-பின்னர் போர்க்களம் புகுமென. விதிவிதித் திருந்த விதி!-இதையெண்ணி விதிர் விதிர்த்ததுவிழியிலான் ஆளும் பதி! (1-பக்.126) விதிதான் அவர்களின் பிறப்பை இவ்வாறு அறுதியிட்டது என்பது ஈண்டு காட்டப் பெறுகின்றது. கதைப் போக்கில் நோக்கினால் இதன் உண்மை தெளியப்படும். (4) எந்த நிகழ்ச்சி நடைபெறினும் அது கர்மத்தின் காரணமாகவே நடைபெறும் என்பதனை தவசிகளும் காசியபரும் ஒருமுகமாகப் பேசினர். இந்த உண்மையைக் கூறும் கவிதைப் பகுதி: பாண்டுவின் பள்ளி நிலா... ···•••••• •••-•••••••• -ஐந்து பிள்ளைகளோடு நின்றுபிரலாபிப்பது கண்டு. 'இது