பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 27 பகவலன் ஒளி : குந்தியை நாடி வந்த தினமணியைக் கூறும்போது: அதுவீசியது ஒளி ! கண் கூசியது வெளி ! குந்திக்கு முன்னால்கூப்பிடு துரத்தில் நின்றான்மறை வந்திக்கும் வெய்யன்: நூறாயிரம் அரும்புகளைநொடியில் அவிழ்க்கும்ஓராயிரம் கையன்! அவன்விசும்பில் வேர்விட்டவெங்கனல் விருட்சம்; அந்த விருட்சம்-தனது வெளிச்ச விழுதுகளைநிதம் நிதம்நிலத்தில் இறக்கும்; இறக்காவிடில் இயற்கை இறக்கும்! " அவன்- - நெடுவானில் நிறுவியநெசவுக் கூடம்; அந்த நெசவுக் கூடம்நெய்து கொடுக்கும்வெய்யில் ஆடையை 9 ஆதவனே ஆற்றலின் மூலம் என்பது தத்துவம். அந்த ஆற்றலால் தான் நிலைத்திணை, இயங்குதினை அனைத்தும் இயங்கி உலகம் நிலை பெற்றுள்ள்து.