பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (w) மானாக வந்த முனிவர் இட்டது: பாண்டு தன் மனைவிமார் இருவரோடும் இமயமலைச் சாரலில் தங்கியிருந்தான் வண்ண மான்களை வேட்டையாட மனைவிமார் இருவருக்கும் காடு பிடித்திருந்தது. இயற்கைக் காட்சிகளை கண்டு களித்துப் பொழுதுபோக்கினர். ஒருநாள் பாண்டு தனியாகவே வேட்டைக் குப் புறப்பட்டான். அன்று மருந்துக்குக்கூட ஒரு மிருகம் அவன் கண்ணில் படவில்லை. ஒரு நாவல் மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தபொழுது சற்றுத் தொலைவில் அடர்ந்த செடிகளின் மறைவில் இரு மான்களைக் கண்டான்.

    • ---------------அவன்

வலக்கை உடனே வாளியைத் தொட்டது! 喻* *** ***●-***●●●● #*啤牌●*●a哆姆琴令 ஒரு பிணைமானும்-அதன் இணைமானும்புணர்ச்சியில் ஒன்றாய்ப் பொருந்திக் கிடந்தன; ஒருமேனி-பால் வாரியாய்; மருமேனி-நீள் மத்தாய்; ஈர் உயிரை இணைத்து-ஒரு கயிறாய்த் திரித்துகாதல் அமுதம்கடைந்து எடுத்துു,ഞ്ഞ് ുഞ്uriஅருந்திக் கிடந்தன. முற்றும் கலவிமுற்றா நிலையில் சற்றும் எதிர்பாராவண்ணம்.