பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 481 விரியன் போல வெளியேறினாள்! (I-பக். 188-89) தேவலோகத்தில் தாசிகளுக்கும் சபிக்கும் ஆற்றல் உண்டுபோலும்! புராணங்களைப் படிப்பதற்கே மனம் கூசுகின்றது. இத்துடன் சாபங்கள் பற்றிய செய்தி நிறைவு பெறுகின்றது. (2) சபதங்கள்: ஒரு செயலை நிறைவேற்றுவதற்காக ஒருவர் செய்யும் சூள் சபதம் எனப்படும். பாண்டவர் பூமியில் வாலியார் மூன்று சபதங்களை மட்டிலும் தெரிவிக் கின்றார். இவை மூன்றும் உலகம் கேட்டிராத முறையில் கெளரவர்கள் செய்த அடாத செயல்களால் எழுந்தவை. அவையில் ஒரு பெண்ணின் ஆடையை உரியும் இழிசெயல் உலக இலக்கியங்களில் காணப்பெறாத அநாகரிகமானது. ( பீமன்: இச்செயலைக் கண்ட வீமன் செய்த சபதம். பத்தினி தெய்வம் துகிலுரிதலை நேரில் கண்ட வீமனது பொத்தி வைத்த சினம் பொத்துக்கொண்டு வர.... வீமன் நுதலில் விழி படைத்தவாமன்போ லானான்; உள்வேக்காடு தாங்காமல்உணர்வுகள் வெந்துவிபூதியாகிப் போனான்! வாளுடைத்த மன்னர்வீற்றிருந்த சபையில்-ஒரு சூளுரைத்தான்; சூளில் சொற்களை-சூளைக்