பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பார்ப்போர் கண்களில் பராசக்தியாய் வழிந்தாள்! ‘மானம் காத்தமாதவன் மேல் ஆணை, குல மாதரார் கற்பின்மாண்பின்மேல் ஆணை! பொய்தடவி வாழும்-இந்தப் புல்லர் துரியன், துச்சன்மெய்தடவி வாழும்-உயிர் மூச்சினை என் மன்னர்-தம் கைதடவி வாழும்-கணையால் கொய்வர்; கொட்டும் குருதியாம்நெய்தடவி நான் முடிப்பேன்; அந் நாள்வரை நீள்குழல் முடியேன்! (I-பக். 156) போரில் இந்தச் சபதங்கள் நிறைவேறுகின்றன. பாரதி பாஞ்சாலி சபதம்’ என்ற துணுக் குக் காவியத்தை ஐந்து இயலில் நிறைவு செய்கின்றார். அற்புதமான படைப்பு இது. இங்குப் பாரதியார் காவியத்தில் வீமன், விசயன், பாஞ்சாலி என்ற முறையில் தான் சபதங்கள் அமைகின்றன. அங்குச் அச்சபதங்கள் ஆறு மரபுக் கவிதைகளில் அமைகின்றன. ஆறும் உணர்ச்சிப் பிரளயங்கள். கவிஞர் வாலியும் இச்சபதங் களைச் சிறிதும் உணர்ச்சி குன்றாமல்-பாரதியின் படைப்புகட்கு நிகராக-தமது புதுக் கவிதையில் படைத்துள்ளார். இருவர் தம் படைப்பு களையும் படித்து ஒப்புநோக்கினால் இந்த உண்மை தட்டுப்படும். (iv) கிருட்டிணன் சபதம்: மேற்கூறிய மூன்று சபதங்களைத் தவிர கிருட்டிணன் சபதம் (பிரதிக்ஞை) என ஒன்று உண்டு. சகாதேவனுடன் தனியாகப் பேசிய 7 பாஞ்சாலி சபதம் - 303,304,305,305,307,308