பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ਲਿ . சம்பந்தம் உடைய எவனும். ஆற்றலாம்-இவை ஆயிரம் தர்மவினை; ஆயினும் விடாது-அன்று ஆற்றிய கர்மவினை! இது விதி; விலக்கல்லஇதற்கு கவுரவர் அதிபதி! உந்து சக்தியாய்ஊழ் உளதால்துரியனுக்கு என்றுமே துயோர் உணர்த்துவர்; நல்லதை விதைத்தாலும் விளையாதஅவன் உள்ளம் ஓர் உவர்! வரும் யுத்தம் வடியும் ரத்தம்; என்குழல் பிடிக்கும் கையே-உன் குழல் முடிக்கும்! (I-பக்.336-37) என்று பாஞ்சாலியிடம் பிரதிக்ஞை (சபதம் செய்துவிட்டுப் புறப்பட்டான் கண்ணன். இதுவும் நிறைவேறுகிறது-கதையில். 4. நிமித்தங்கள் எல்லாக் காலத்திலும் நிமித்தங்கள், சகுனங்கள், கனவுகள் போன்றவை பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருவதைக் காவியங்கள் உணர்த்துகின்றன. பாண்டவர் பூமியில் இவை வரும் இடங்களைக் காண்போம்.