பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-> வருணனை வளம் : 29 ஒரு சுருக்க மில்லாத அருக்கன் புகழை சுருக்க முடியுமோ சொல்லில்?-ஒர் அலகு இலாத-அவன் அருளொளி இல்லையேல் உலகு உழன்றிடும் அல்லில்! (I-பக்.90-91 அற்புதமான வருணனை அறிவியல் கருத்தும் அமைந்த அழகான வருணனை: உலகுக்கெல்லாம் உயிர் ஊட்டும் ஆதவன் இல்லையேல் இந்த அவனி சூனியம் ஆகிவிடும். 3. செயற்கை இயற்கை வருணனை வாலியார் காவியத்தில் இடம் பெற்றதுபோல செயற்கையால் ஏற்பட்டவையும் இடம்பெறு கின்றன. கண்ணன் கருத்துப்படி பாண்டவர்க்காக நகர் ஒன்றை நிர்மாணித்தான் விசுவகர்மா என்னும் தேவ சிற்பி. () இந்திரப் பிரஸ்தம்: காரியம் யாவையும்-ஒரு கவித்துவத்தோடு செய்தான்; காடு என்னும்-அகல ஏடு எடுத்து-அதில் வீடு என்னும்விருத்தம் நெய்தான்! அடடா! அவனுக்கு கல்லே சொல்லானது; கட்டடமே கவிதையானது!