பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பாரத்தை குல கவுரவத்தில் சிரத்தையில்லாச் சிறியன்; தானேசேதித்துக் கொள்ளலாம்-தனது சிரத்தை! அப்படியும் வாழ்பவன்அற்பத்திலும் அற்பம்; அவமானப்படும்அவனைச் சுமந்த கற்பம்! என் சேய்புத்தி ஏனடாசீரழிந்து இப்படிநாய்புத்தி ஆனது? நரகல் தின்னப் போனது? தாயத்தார் வாழ்வைதாயத்தால் வவ்வினால்தேயத்தர் தூற்றுவர் தெருத் தெருவாய்ச் சாற்றுவர்! ஆளாக்கினேனே உன்னை ஆசை ஆசையா! நீ அம்புலிக் குலத்தில்வந்த அமாவாசையா? வேண்டாமடா-இந்த விபரீதமான சூது; இது தீதுக்கும் தீதுக்கும் தீதான தீது! (II- Lé. 124) முதலில் உண்மையாகவே கடிகின்றான்-சூது கூடாதென்று. பிள்ளைப் பாசமும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி அச்சுறுத்தலும் அவனது திட்டத்தை ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகின்றன.