பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 491 வருணனை வழிபடுகின்றான். இருவரும் மானிட சட்டையில் வந்தவர்கள்தாமே! 5. சூதால் விளையும் கேடுகள் சூது மிகக் கொடியது; வாழ்வையே உலுக்கும் தன்மையது. நளனது வாழ்வும் உதிட்டிரனது வாழ்வும் இதனை விளக்கும் சான்றுகள். "வேண்டற்க வென்றிடினும் சூதினை” (குறள்-93) என்று வள்ளுவன் பேசுவான். ஓர் அதிகாரமே சூது பற்றி குறளில் இடம் பெற்றுள்ளது. () ஒரு மண்டபம் எழுப்பி அதற்கு ஒரு விழா எடுத்து, அதற்குப் பாண்டவர்களை வருவித்து, சூது விளை யாட்டுக்கு ஏற்பாடு செய்து அதில் தருமனின் சொத்துக்கள் அனைத்தையும் கவர வேண்டும் என்று தந்தையிடம் குறிப்பிடுகின்றான் துரியன். அதனைக் கேட்ட அந்தக அப்பன் சினந்து அவனைக் கடிகின்றான். அப்போது அவன் பேசியது: அடேய்! நீஆண்பாடுமிக்கநன்மகனா? அல்லது நபும்சகனா? போனதோ புலிச்செயல்? வழிமறை ஆனதோஅலிச் செயல்? களத்தில்-தாயக் கட்டையில் வெற்றியை ஈட்டும்... கரத்தைக்கொண்டு-பிறரது காசைப் பிடுங்குவோன்-ஆண்