பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு யாதுவரினும்-அது அரைவாசிதான் கெடும்; விலை மாதுவந்தால்-அது முக்கால்வாசி கெடும்; பொல்லாச்-சூது வந்தால்-குடி சுத்தமாய்க் கெடும்! (II- u&i. 127-28) சூது மிக மிகக் கேடானது என்பதை தருமன் பேச்சால் அறிய முடிகின்றது. (3) நளன் பற்றிய காவியத்திலும் கவ்றாடல் நுழைக்கப் பெற்று அதன் கொடுமை விளக்கப் பெறுகின்றது. 6. சாதிக்கொடுமை இதனைச் சாடுவதற்கும் இடம் அளிக்கின்றார் கவிஞர் வாலி தன் பாண்டவர் பூமியில். இது கண்ணிலான் மைந்தன் துரியன் வாயில் வைத்துப் பேசப்பெறுகின்றது. ஒருசமயம் துரோணர் குருகுலத்தில் கல்வி பயின்ற அனைவர்க்கும் தேர்வும் போட்டியும் வைக்கின்றார். ஊர் மக்கள் திரண்டிருக்க அரச குடும்பமே பார்வையாளர் நடுவில் ஆக்கிரமித்திருந்தது. (1) பாண்டவரும் கவுரவரும் தாம் கற்ற ஆயுதப் பயிற்சியை அரங்கேற்றினர். இறுதியில் பார்த்தன் ஆற்றிய அம்பு வித்தைகள் அனைவரையும் அதிசயிக்க வைத்தன. துரோணரின் மாணாக்களில் ஒருவனான கர்ணன், - முண்டா தட்டினான் முண்டாவில் முன்கை மணிக்கட்டால் முரசு கொட்டினான் துவந்த யுத்தம் தொடங்கும் முன்பதாகவே கிருபர் தடுத்தார். போட்டியிட புய வலிமை மட்டிலும் போதாது;