பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 495 அவரவர் குலம் கோத்திரம் முதலியவற்றை முன் வைத்து கர்ணன் பிறந்த குலத்தை கேள்விக் குறியாக்கினார் கிருபையே இல்லாத கிருபர். கர்ணன் கூனிக் குறுகிக் கூசிப்போனான். துடித்தெழுகின்றான் துரியோதனன். தந்தை பெரியார் போல பேசுகிறான்; சீர்திருத்தக் கருத்துகளைச் சிந்துகிறான்; சாதிக் கொடுமைகளைச் சாடுகின்றான்: 'குருவே!-தங்கள் கூற்று நீதியல்ல; ஒருவனின்கல்வியை வீரத்தைகணிப்பது சாதியல்ல! சாதிக்கும் ஆற்றல்-எந்த சாதிக்கும் உண்டு; ஒருசிலசாதிக்கே அது சாத்தியமென்றுசாதிப்பதா நன்று? வேதம்பயின்றிட ஒருசாதி; வாணிகம்புரிந்திட ஒருசாதி; வாள்கொண்டுபோரிட ஒருசாதி; உழைத்துச் சோறிட ஒரு சாதிஎன வகுத்தால்எங்ங்னம் நாம் உய்வம்? நாலில் எக்குலம் என்றுநானிலத்தார் ஒவ்வொருவரின்தோலில் எழுதி யிருக்கிறதாதோற்றுவித்த தெய்வம்? எவ்வுயிர்க்கும்இவ்வுலகு இட்டபெயர்.