பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கவிஞர் வாலி தம் பாண்டவர் பூமியில் தரும் இதன் சாரம் அமுல்-பால் போன்றது. பாமரர்உள்ளத்தையும் கவரவல்லது. அந்த சாரத்தையும் சிறிது வடிகட்டி மிகச் சுருக்கமாக ஈண்டு தர முயல்கிறேன். முன்னுரையாக சில கருத்துகளை முன்னர்த் தருவேன். உயர்ந்த தத்துவங்களைப் புகட்டுவது உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை. இவை உயர்ந்த வேதாந்த உண்மைகளைப் புகட்டுபவை. வேதாந்த ஆராய்ச்சி மன அமைதியைத் தருவதாகும். ஆரண்யங்களில் அமைதியாக இருந்துகொண்டு இத்தகைய பர தத்துவங்களை ஆராய்ந் தனர் ஆன்றோர். உபநிடதங்கள் யாவும் தபோ வனங்களி லிருந்து தோன்றியவை. பகவத்கீதையோ அல்லல் நிறைந்த அமர்க்களத்தில் உபதேசிக்கப்பெற்றது. வேதாந்தத்திற்கு சாந்தி பாடம் என்ற ஒரு பெயர் உள்ளது. சாந்தியை மக்கள் நடமாட்டமற்ற ஏகாந்தமான இடத்திலும் பெறலாம்; பயங்கரமான போர்க்களத்திலும் அதனைப் பெறலாம். உலகவாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். எத்துறையிலாயினும் மனிதன் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடியுள்ளான் என்னும் பொருள் அடங்கியுள்ளது. அதில், சண்டைகள் பலவற்றைக் கண்ணன் தானே திறம்படச் செய்து முடித்துள்ளான். அவனுடைய வாழ்க்கையே போராட்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. போர் மயமான வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கீதை புகட்டுகின்றது. வாழ்வு என்னும் போராட்டத்திற்கு மனிதன் தகுதியுடையவனாக வேண்டும்.