பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்- 1 (്കി சாரத்தின் ១ា "உபநிஷதங்கள் யாவும் பசுக்கள், கிருட்டிணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேறரிஞர்; கீதை என்னும் அமிழ்தம் ஒப்பற்ற பால் ஆகிறது” (கீதை-தியான சுலோகம்-4) குருட்சேத்திரப் போர்க்களத்தில் தேர்த்தட்டிலிருந்த வண்ணம் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றது கீதை போர் தொடங்குவதற்கு முன் பத்து அல்லது பதினைந்து மணித் துளிகள் இந்த உபதேசம் நடைபெற்றிருக்கலாம். ஆசிரியர்க் குரிய இலக்கணம் எல்லாம் அமையப்பெற்றவன் கண்ணன்; காண்டீபனும் சீடர்கட்குரிய (மாணவர்கட் குரிய) இலக்கணங்கள் யாவும் அமையப்பெற்றவன். இதனை சொன்னால் நம் போலியருக்கும் பொது மக்களுக்குப் புரியாதென்று கருதியே வியாசர் பதினெட்டு இயல்களில் ஏழுநூறு சுலோகங்களில் விளக்கியுள்ளார். இந்தக் கீதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. பல அறிஞர்கள் விளக்கமும் எழுதியுள்ளனர். வேதாந்த தேசிகளின் கீதார்த்த சங்கிரகம் (சங்கிரகம்-சுருக்கம்) மிகு புகழ் வாய்ந்தது. இவையெல்லாம் பால் போன்றது. 1 பத்ரிகாசிரமத்தில் இவர்களே நாராயணனாகவும் நரனாகவும் தோன்றி நரனுக்கு நாராயணன் உபதேசித்தக் கருத்தும் இதுவே 2 தேசிகப் பிரபந்தம்326-346-2 சுலோகங்கள். வங்கிபுரம் நவநீதம் சீராம தேசிகாசாரியர் விளக்கவுரையுடன் படித்துப் பயன்பெறக் கூடியது.