பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் * 507 திறம்படத்தொழில் புரிதலே யோகம்; அதைப் புரிவார்க்கு வாராதுபிறப்பென்னும் ரோகம்! வெற்றி தோல்விகளைவிட்டொழித்தார். யாண்டும் அறிவார்-கர்ம யோகத்தின் சூட்சம்; எளிதாய் அவர்கள் ஏறுவர் மோட்சம்! (III-415-420) (3) ஸ்திதப் பிரக்ஞன் சமாதி நிலையை சார்ந்து நிற்பவனை-கர்மயோகத்தை யோக்கியமாய்க் கற்ப வனை-இனம் காண்பது பற்றிக் கார்முகில் வண்ணன் கழிறுவது, ஆன்மாவே-ஒர் ஆனந்த சொரூபம் எனபதை எவன் நேர்வானோ; சகத்துள் இருக்கும்சகல சந்தோஷங்களும்-தன் அகத்துள் இருப்பதைஆர் ஒர்வானோ, நெஞ்சில் துளிர்க்கின்றநசைகளை-எவன்நஞ்சில் தோய்ந்தவை-என நிராகரிக்கிறானோ புயலடித்தாலும்புலம் பெயராப் புல்போல்-எந்த