பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-12 ஆதவ வம்சம் அப்பழுக்கற்றது: பரம்பொருளே தசரத குமாரர்களாக அவதாரம் செய்தனர்-ஆதவன் தூய்மை யானவன். அறிவியலறிஞர்கள் கூறும் சூரியப் புள்ளிகளைத் தவிர வேறு குறையில்லை; அவையும் ஊனக்கண்ணுக்குத் தெரியாதவை. அம்புலி களங்கமுடையது. களங்கமற்ற பகுதி பாண்டவர்களையும் களங்கமுள்ள பகுதி கவுரவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். தவிர பாண்டவர்கள் தேவர் களின் அமிசமாகத் தோன்றியவர்கள்; கவுரவர்கள் பிண்ட மாய்த் தோன்றி தாழிகளில் குழந்தைகளானவர்கள். இவை போன்ற செய்திகளுடன் இந்த நூலின் சுருக்கமும் தோரண வாயிலில் காட்டப்பெற்றுள்ளன. கண்ணன் தேவகி வயிற்றில் (அம்புலி வமிசம்) பிறந்தாலும் இடைக் குலத்தில் வளர்ந்து இடையனாகவே காட்சி அளிக கின்றான் என்றும், எங்கிருந்தோ வந்ததுபோல் அடிக்கடி அத்தினபுரம் வந்த கண்ணனின் பங்கு கதையில் ஏனையோர் பாங்கினை விஞ்சி நிற்கின்றது என்றும் சுட்டப்பெற்றுள்ளன. இயல் இரண்டில் பாண்டவர் பூமியில் ஆங்காங்கே பொதிந்துள்ள வருணனை வளம் () இயற்கை-ஆற்றங் கரைகள், வனங்கள், வரைகள்; (2) சூரிய மண்டலம்; (3) செயற்கை-இந்திரப் பிரஸ்தம், மயன் சமைத்த மண்டபம், ஏகசக்கரம், (4) கடவுளர்கள்-முருகன், சூரியன்; (5) முனியுங்கவர்கள்-வியாசர், நாரதன், மந்தபாலர், மாண்டவ்யர், (6) அழகின் தத்துவம்-பெண்ணின் பெருமை, பெண்கள் அழகு, (சத்தியவதி, பிருதை, சித்திராங்கதை, இடிம்பி, ஊர்வசி, ஜாலவதி, தமயந்தி, உலுபி, பாஞ்சாலி), ஆணின்