பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு என்றும், வாழ்க்கையில் வருவது இரசம் ஆகாது என்றும் விளக்கப் பெற்றுள்ளன. இயல் எட்டு கண்ணன் தூது போனதன் ஏற்றம் இயம்புகின்றது. இது வில்லி பாரதத்தில் அமைந்துள்ள பாங்கும் எடுத்துக் காட்டப்பெற்று இரண்டும் ஒப்பீடு செய்யப்பெற்றுள்ளன. பூபாரம் தீர்க்க வந்த புயல்வண்ணனின் பொறுப்பு நிறைவேற்றுவதன் அடிப்படையே இஃது என விளக்கப் பெற்றுள்ளது. இயல் ஒன்பதில் காவியத்தைப் படைத்த கவிஞர் வாலியின் கிருட்டிணி பக்தி விரிவாகக் காட்டப் பெற்றுள்ளது. ஆதிமூலம்தான் ஆகாயம் விட்டு அன்னை மூலம் அம்புவிக்கு வந்து செய்த திருவிளையாடல்களை கவிஞர் வாலி குறிப்பிடும்போது தம்மையே மறந்த நிலையாகி விடுகின்றார் என்றும், அவர் வாக்கில் கண்ணனைப்பற்றி வரும் ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும் ஆழ்வார் பாசுரங்களின் அடியொற்றி அமைந்துள்ளன என்றும் எனககுத் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளேன். இயல் பத்து காவியத்தில் பொதிந்துள்ள உண்மை களையும் படிப்பினைகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. இவை (1) வாழ்க்கை பற்றியவை-பற்றுபந்தம் பாசம், அறம், வாழ்க்கை நியதி, மனம், துறவு, நிலையாமை முதலியவை; (2) விதி பற்றியவை, (10 நிகழ்ச்சிகள்), (3) நம்பிக்கைகள், சாபங்கள், (அறுவர் போட்டவை), சபதங்கள் நால்வர் செய்தவை), (4) நிமித்தங்கள் (ஐந்து நிகழ்ச்சிகள்), (5) சூதால் விளையும் கேடுகள் (6) சாதிக் கொடுமை என்ற தலைப்புகளில் சாற்றப் பெற்றள்ளன. இயல் பதினொன்று கண்ணன் அருளிய கீதை பற்றியது. இராமன் வாழ்ந்து காட்டினான்; கண்ணன் வாழ்ந்து