பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை * 531 காட்டியதுடன் மன்பதைக்கு என்றும் வழிகாட்டக் கூடிய தாகவுள்ள கீதையை விட்டுச் சென்றுள்ளான். ஏழுநூறு சுலோகங்களால் அமைந்துள்ள கீதையின் சாரமாக தம் காவியத்தில் தந்துள்ளார் கவிஞர் வாலி. இதனையே அடியேன் சாரத்தின் சாரமாக பதினான்கு தலைப்புகளில் தந்துள்ளேன். ‘பாண்டவர் பூமி’ புதுக் கவிதையில் அமைந்த ஒரு ‘கட்டுரைக் காவியம். வியாச பகவான் வடமொழியில் அமைத்த இப்பெருங்கதையை தமிழில் விருத்தயாப்பில் வில்லிபுத்துராழ்வார் வழங்கியுள்ளார். தமிழில் நல்லாப்பிள்ளை பாரதம் என்ற ஒரு நூலும் உண்டு. வியாச பாரதம் தமிழ் வசன நடையில் தோன்றி தமிழுலகத்தில் பெருந் தொண்டு புரிந்துள்ளது. அப்பதிப்பு இன்று அருகிவிட்டது. வில்லியும் நல்லாப்பிள்ளையும் புலவர்களின் சொத்துகளாக இருக்க, கவிஞர் வாலியின் புதுக்கவிதையில் அமைந்த பாண்டவர் பூமி’ பொதுமக்களின் சொத்தாக அமைந்துவிட்டது; புலவர்கட்கு எட்டும் போக்கிலும் அமைந்துள்ளது. இதனை இவ்வுலகுக்கு வழங்கி உபகரித்த கவிஞர் வாலி தமிழ் வியாசர் என்று கருதும் அளவுக்கு உயர்ந்துவிடுகின்றார்; தமிழர் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப் பெற்றுத் திகழ்பவருமாகின்றார். H