பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 39 ஏகப் புகழைஏந்திக் கொண்டு-மூக்கில் யாகப் புகையையாண்டும் சுமந்த ஊர்! எழுதாக் கிளவியைமுழுதாய்க் கற்றார்-நெறி வழுவாது வாழ்ந்த ஊர்; கன்றுகள், கறவைகள்கூட்டமாய் மேய்ந்திடும்குன்றுகள் சூழ்ந்த ஊர்! செளஜன்னியம் எனும்சரட்டினில்சகல ஜனங்களையும்-ஒரு ஒரு சரமாய்க் கோத்த ஊர்; அத்வைதம் என்னும்அரிய அரவிந்தம்-அங்குள்ள வித்வான்களின்-உள்ள வாவியில் பூத்த ஊர்! ஏக சக்கரத்தின்இத்துணை பெருமைகளையும்காலசக்கரம்-சமீபத்தில் கிழித்துப் போட்டது; நகுதல் என்பதைநகரத்து மாந்தரின்உதடுகளிலிருந்துவழித்துப் போட்டது! (I- பக்:308) வாழ்வும் தாழ்வும் சக்கரம்போல் சுழன்று வருவதால் இந்த ஊர் பெயர்ப்பொருத்தம் அமைந்த ஊர் போல் தோன்றுகிறது.